முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்டது அதிமுக- யாராலும் அசைக்க முடியாது- நத்தத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019      திண்டுக்கல்
Image Unavailable

நத்தம், -  திண்டுக்கல் பாராளுமன்ற பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து நத்தம் பஸ் நிலையம் அருகில் மாம்பழ சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது. அதிமுக கூட்டணி மெகா கூட்டணியாகும். இது ஒரு வெற்றி கூட்டணியாகும். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு அதிகளவில் மாம்பழ சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெற செய்யுங்கள். அப்போது அவர் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை பெற்று இப்பகுதியின் வளர்ச்சிக்கு பெரிதும் கடமையாற்றுவார். ஏற்கனவே நமது மறைந்த முதல் அமைச்சர் அம்மா அவர்கள் காட்டிய நல்வழியில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. ஏழை மக்கள் பயடைய 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குருவிக்கு கூட வீடுகள் உள்ளது. சாதாரண மக்கள் குடிசையில் வாழ்வதை பார்த்து அவர்கள் வாழ்வு உயர்வடைய பசுமை வீடு திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் மொத்தம் 16 லட்சம் குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு 6 லட்சம் வீடுகள் இதுவரை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 10 லட்சம் வீடுகள் 2023ஆம் ஆண்டுக்குள் கட்டிக் கொடுக்கப்படும். 2பெண் குழந்தைகள் உள்ளவர்களுக்கு அதற்கான சேமிப்பு தொகை வழங்கும் திட்டம், மகப்பேறு நிதி உதவி 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. பொங்கல் பரிசாக ரூ.ஆயிரம் வரை வழஙகப்பட்டது. 60 லட்சம் பேருக்கு ரூ.2ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டது. அதை தி.மு.க தொடர்ந்த வழக்கின் மூலம் நிறுத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் தடையை நீக்கி அறிவித்தப்படி அனைவருக்கும் வழங்கப்படும்.ஸ்டாலின் எந்தக் காலத்திலும் முதலமைச்சராக வர முடியாது. நமது கழகம் ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்டது. இங்கு எத்தனை பூகம்பம், புயல் ஏற்பட்டாலும் நம்மையும், நம் தொண்டர்களையும் அசைக்க முடியாது. மேலும் அதிமுக என்பது எஃகு கோட்டையாகும். இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரச்சார கூட்டத்தின் போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,முன்னாள் அமைச்சர் நத்தம். விசுவநாதன், மாநில பேரவை இணை செயலாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் மருதராஜ், ஒன்றியசெயலாளர்கள் ஷாஜகான், ராமராஜ், நகரசெயலாளர் சிவலிங்கம், மாவட்ட பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் உத்தமன், நகர்பொருளாளர் சீனிவாசன், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து