சேலத்தில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது முதல்வர் எடப்பாடி வீதிவீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      தமிழகம்
salem-cm-election 2019 04 16

சேலம், சேலம் மாநகரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடை, கடையாய் ஏறி இறங்கி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

கடை வீதியில்...

சேலம் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சேலம் மாநகரில் வீதி, வீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.  சேலம் பட்டக்கோவில் பகுதியில் தனது பிரச்சாரத்தை துவங்கிய முதல்வர் அங்கிருந்து நடந்து சென்று சின்னக்கடை வீதி,பெரியக்கடை வீதி வழியாக சேலம் டவுன் கன்னிகா பரமேஸ்வரி கோவில் வரை சுமார் 2 கி.மீ தூரம் வரை அவர் கொளுத்தும் வெயிலில் வீதி, வீதியாக நடந்து சென்று சின்னக்கடை வீதி மற்றும் பெரிய கடை வீதியில் இருபுறம் உள்ள கடைகள்,வியாபார நிறுவனங்கள், கடைகளில் வியாபாரத்திற்கு வந்திருந்த பொதுமக்கள், சாலையோர கடைகள், காய்கறி மற்றும் பழ வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடமும் வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனுக்கு துண்டு பிரசுரங்களை வாக்காளர்களிடம் கொடுத்து வாக்குகள் சேகரித்தார். சாலையின் இருபுறமும் உள்ள அனைத்து கடைகளிலும் அவர் ஏறி இறங்கி வாக்குகள் சேகரித்தார்.

பலத்த பாதுகாப்பு...

தமிழக முதல்வர் வருகையையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும் அவர் பாதுகாப்பு வளையங்களையெல்லாம் மீறி அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டன் எப்படி தனது இறுதி கட்ட பிரச்சாரத்தில் பரபரப்பாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவானோ அந்த அளவிற்கு கொளுத்தும் வெயிலையும் அவர் பொருட்படுத்தாமல் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அவரை வரவேற்க ஏராளமான பொதுமக்களும், தொண்டர்களும் அப்பகுதியில் குவிந்திருந்தனர். ஏராளமான பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

டீ சாப்பிட்ட முதல்வர்

அவரை தொடர்ந்து தொண்டர்களும் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர்.. அப்போது சின்னக்கடை வீதி ராஜாஜி காதிபவன் எதிரே உள்ள டீக்கடை ஒன்றி்ல் திடீரென வாக்கு சேகரித்த முதல்வர் அந்த டீக்கடையில் பொதுமக்களோடு, பொதுமக்களாய் அமர்ந்து டீ சாப்பிட்டார். பின்னர் அங்கு அமர்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். பின்னர் வீதி வீதியாக நடந்து சென்ற அவர் சின்னகடை வீதி வேணுகோபால சுவாமி திருக்கோவிலின் அர்ச்சனை பிரசாதத்தையும் ஏற்றுக் கொண்டார்.

காலில் விழுந்து...

அதைத்தொடர்ந்து நடந்து சென்றே வாக்கு சேகரித்த அவர் 80 வயதிற்கும் மேற்பட்ட பாட்டி ராஜாஜி காதிபவன் கடை வாசலில் பொதுமக்களோடு, பொதுமக்களையாய் முதல்வரை பார்க்க நின்று கொண்டிருந்தார். தள்ளாத வயதிலும் தன்னை பார்க்க ஆர்வமாக நின்று கொண்டிருந்த பாட்டியை பார்த்த முதல்வர் நேரடியாக பாதுகாப்பு வளையத்தையும் மீறி அவரிடம் சென்று துண்டு பிரசுரத்தை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனன் அந்த பாட்டியின் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றார். தொடர்ந்து அவர் பெரியகடை வீதிகளிலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வாக்குகள் சேகரித்தார். பின்னர் சேலம் டவுன் காவல் நிலையம் அருகில் உள்ள கன்னகிகா பரமேஸ்வரி கோவில் அருகில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

நிர்வாகிகள்...

முதல்வருடன் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ., சேலம் பாராளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.சக்திவேல், சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன், வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன்,பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, சண்முகம்,தியாகராஜன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.கே.செல்வராஜ், மாநகர பொருளாளர் பங்க் வெங்கடாஜலம், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.ஆர்.ஆர். அய்யப்பமணி, மகளிர் அணி செயலாளர் ஜமுனா ராணி, அண்ணா போக்குவரத்து மண்டல செயலாளர் சென்னகிருஷ்ணன், பா.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர் இரா.அருள்,நகர செயலாளர் கதிர் ராசரத்தினம்,தே.மு.தி.க. மாநகர செயலாளர் இராதா கிருஷ்ணன்,பாஜக மாநகர தலைவர் கோபிநாத், எம்.எல்.ஏ.க்கள்,முன்னாள் ,எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேர்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து