முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் - ஆப்கான் மோதலை தீர்ப்பது மிக எளிது: அதிபர் ட்ரம்ப்

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2025      உலகம்
Trump-2025-02-19

Source: provided

வாஷிங்டன் : பாகிஸ்தான் - ஆப்கன் மோதலை தீர்ப்பது எளிது என்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. எல்லையில் இரு நாட்டு படைகளும் கடுமையாக மோதிக்கொண்டன. தற்போது சண்டை நிறுத்தம் அமலாகியுள்ளது. அனாலும் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் மோதலை தீர்த்து வைப்பது தனக்கு எளிது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப் கூறியிருப்பதாவது -

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கு  இடையிலான பிரச்னையை தீர்ப்பது எனக்கு எளிது. இந்தியா-பாகிஸ்தான் மோதல் உட்பட 8 உலகளாவிய போர்களை தீர்த்துவிட்டேன். நான் ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்னையைத் தீர்க்கும்போது, ​​அடுத்ததைத் தீர்த்தால், உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்கும்' என்று சொல்கிறார்கள்.  ஆனால், எனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. யாரோ ஒருவர் அதைப் பெற்றார். இருந்தாலும் எனக்கு  கவலையில்லை. எனக்கு உயிர்களைக் காப்பாற்றுவதுதான் முக்கியம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து