தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2019      தமிழகம்
heavy rain 2019 04 17

சென்னை : தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் சூறைக்காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு...

தெற்கு மத்திய மகாராஷ்டிராவில் இருந்து கன்னியாகுமரி வரையிலுள்ள வலிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளதாலும் வெப்பச்சலனத்தின் காரணமாகவும் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சூறைக்காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. 

சூறைக் காற்றுடன்...

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒருவாரமாக இயல்பை விட வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடந்த  24 மணி நேரத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை மற்றும் பேச்சிப்பாறையில் 5செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ் ஆகும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து