எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் இன்று தேர்தல் நடைபெற உள்ளதால், தியேட்டர்களில் இன்று காலை மற்றும் மதியம் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று விடுமுறை...
தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில் மக்கள் பணிச்சுமையின்றி வாக்களிக்கும் வகையில், இன்று (ஏப்ரல் 19) அரசு விடுமுறை தினம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களும் சிரமம் இன்றி வாக்களிக்க ஏதுவாக, அவர்களுக்கு இன்று சம்பளத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காட்சிகள் ரத்து...
இந்நிலையில், தேர்தலையொட்டி தமிழகம் முழுவதிலும் உள்ள தியேட்டர்களில் இன்று காலை மற்றும் மதியம் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. தமிழகத்திலுள்ள திரையரங்குகளில் வியாழக்கிழமை காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


