முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோரில் 'டிக் டாக்' செயலி நீக்கம்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மத்திய அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து இந்தியாவில் டிக் டாக் செயலி பதிவிறக்கத்தை கூகுள் பிளே ஸ்டோர் முடக்கியுள்ளது.

மதுரை ஐகோர்ட் தடை...

சீனாவின் டிக் டாக் வீடியோ செயலி ஆனது இந்தியாவில் இதுவரை 24 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் டிக் டாக் செயலி மூலம் ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலான வீடியோக்கள் பரப்பப்படுவதாக அதற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்தது. மேலும் டிக் டாக் செயலி பதிவிறக்கத்தை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

டிக் டாக் முடக்கம்...

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்வதை முடக்குமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை கேட்டுக் கொண்டிருந்தது. இதன் அடிப்படையில் கூகுள் பிளே ஸ்டோரில் டிக் டாக் முடக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து