உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கை அணி அறிவிப்பு - கருணாரத்னே கேப்டன்

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2019      விளையாட்டு
Sri Lanka Karunaratne captain 2019 04 18

கொழும்பு : உலகக்கோப்பைக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் நான்கு வருடமாக ஒருநாள் போட்டியில் விளையாடாத கருணாரத்னே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

15 பேர் அணி...

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணிகளும் 15 பேர் கொண்ட தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. நேற்று மதியம் இலங்கை அணி 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்காமல் இருந்த கருணாரத்னே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வீரர்கள் விவரம்:-

1. கருணாரத்னே, 2. அவிஷ்கா பெர்னாண்டோ, 3. திரிமன்னே, 4. குசால் பெரேரா, 5. குசால் மெண்டிஸ், 6. மேத்யூஸ், 7. டி சில்வா, 8. வாண்டர்சே, 9. திசாரா பேரேரா, 10. உடானா, 11. லசித் மலிங்கா, 12. லக்மல், 13. நுவான் பிரதீப், 14. ஜீவன் மெண்டிஸ், 15. ஸ்ரீவர்தனா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து