முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று முதல் 2 நாட்களுக்கு வயநாடு தொகுதியில் பிரியங்கா பிரசாரம்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, வயநாடு தொகுதியில் இன்று முதல் 2 நாட்களுக்கு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்கிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் வருகிற 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.அங்கு வருகிற 21-ம் தேதியுடன் தேர்தல் பிரசாரம் ஓய உள்ளது. அதற்கு இன்னும் 2 நாட்களே அவகாசம் இருப்பதால் வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வயநாடு தொகுதியில் மனுதாக்கல் செய்த பிறகு ராகுலும், பிரியங்காவும் சேர்ந்து ரோடு ஷோ நடத்தினார்கள். அதன் பிறகு சமீபத்தில் ராகுல் மட்டும் வந்து ஒருநாள் சூறாவளி பிரசாரம் செய்தார். அவர் மற்ற மாநிலங்களுக்கும் செல்ல வேண்டி இருப்பதால் மீண்டும் வயநாடு தொகுதிக்கு வர இயலவில்லை.

இதைத் தொடர்ந்து அவருக்கு பதில் பிரியங்கா வயநாடு தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து 2 நாள் தீவிர பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். வயநாடு தொகுதிக்கு பிரியங்கா இன்று வருகிறார். வயநாட்டில் அவர் பங்கேற்கும் பிரமாண்ட ரோடு ஷோ நடைபெற உள்ளது. அதன் பிறகு 2 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பிரியங்கா பேசுகிறார். இன்று இரவு அவர் வயநாடு தொகுதியில் தங்குகிறார். இன்றும், நாளையும் அவர் வயநாடு தொகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். வயநாடு தொகுதியில் 80 சதவீதம் விவசாயிகள் உள்ளதால் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்த பிரியங்கா திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு வயநாடு தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளையும் பிரியங்கா சந்தித்து பேச உள்ளார். 2-வது நாள் நிலம்பூர், மலப்புரம் ஆகிய 2 இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். அன்று இரவு அவர் கேரளாவில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து