முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாதவிடாய் விடுப்பு அளித்தால் பெண்கள் வேலை பறிபோகும்: சுப்ரீம் கோர்ட் கருத்து

வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2026      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கட்டாய விடுப்பு என்று சட்டம் கொண்டுவந்தால் அது பெண்களின் வாழ்க்கையைப் பாதிக்கும், நிறுவன உரிமையாளர்கள், பெண்களை வேலைக்கு அமர்த்த மாட்டார்கள். பெண்களின் வாய்ப்புகள் பறிபோகும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

பணிபுரியும் பெண்களுக்கு நிறுவனங்களில் மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பு அளிக்க மாநிலங்களுக்கு சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஷைலேந்திர மணி திரிபாதி என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று (வெள்ளிக்கிழமை) தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையின்போது நீதிபதிகள், "பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கட்டாய விடுப்பு என்று சட்டம் கொண்டுவந்தால் அது பெண்களின் வாழ்க்கையைப் பாதிக்கும். ஊதியத்துடன் விடுப்பு என்றால் நிறுவன உரிமையாளர்கள், பெண்களை வேலைக்கு அமர்த்த மாட்டார்கள். பெண்களின் வாய்ப்புகள் பறிபோகும்.

அது பெண்களிடையே உளவியல்ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும். ஆண்களைவிட பெண்கள் தாழ்வானர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கும். விழிப்புணர்வை ஏற்படுத்துவது வேறு, கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வருவது வேறு, சில நிறுவனங்கள் தாமாக முன்வந்து பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிக்கின்றன, அது வரவேற்கத்தக்கது. ஆனால், அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாயமாக்கினால் அது பணியிடங்களில் பெண்களின் பங்கைக் குறைக்கும். அரசியலமைப்புரீதியாக பெண்களுக்கு உரிமைகள் உள்ளன. ஆனால், சந்தை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதுவரை இதுதொடர்பாக எந்த பெண்ணும் நீதிமன்றத்தை அணுகவில்லை" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து