Idhayam Matrimony

வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து 3-வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2026      இந்தியா
LPG-parliment-2026-03-13

புதுடெல்லி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக எல்.பி.ஜி. சிலிண்டர் பற்றாக்குறை நிலவுவதைக் கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் நேற்று 3-வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகர் துவார் பகுதியில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மேற்கு ஆசியாவில் நடக்கும் போரால் இந்தியாவுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் கே.சி. வேணுகோபால், ‘‘ஆட்சியாளர்கள் யதார்த்தத்தில் வாழவில்லை. அவர்கள் கனவுலகில் வாழ்கிறார்கள். எங்கள் தொகுதிகளில் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். தேசிய தலைநகரிலும் மக்கள் துன்பப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த யதார்த்தம் அவர்களை பாதிக்கவில்லை. அவர்கள் வாழும் உலகம் வேறாக உள்ளது. பொதுமக்களுடன் அவர்கள் இல்லை. இந்த அரசின் தவறான அணுகுமுறையாலும் வெளியுறவுக் கொள்கையாலுமே பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த விஷயம் குறித்து ராகுல் காந்தியை பேசவிடாமல் செய்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறும்போது, “நாம் அமைதிக்கான ஆக்கப்பூர்வமான குரலாக ஒலிக்க வேண்டும். இந்த மோதல் நம்மை கடுமையாக பாதித்துள்ளது. இது மற்ற நாடுகளையும் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் எரிசக்தி விநியோகத்தையும் எரிசக்தி பாதுகாப்பையும், வளைகுடா நாடுகளில் வாழும் 90 லட்சம் இந்தியர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்பையும் பாதிக்கப் போகிறது. நமது பல சர்வதேச உறவுகள் இதனால் ஆபத்துக்குள்ளாகி உள்ளன.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து அழுத்தம் கொடுப்பதே உலக நலனுக்கு உகந்தது. இதில் நாம் ஒரு முன்னணி குரலாகத் திகழ வேண்டும். புவியியல் ரீதியாக நாம் அருகில் இருப்பதால், நமக்கு இழப்பு அதிகம். இதனால் நாம் அதிகம் பாதிக்கப்படுகிறோம்’’ என தெரிவித்துள்ளார்.

சிபிஐ எம்.பி. சந்தோஷ் கூறும்போது, ‘‘நாடு முழுவதும் குறிப்பாக பெரு நகரங்கள்தோறும் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. கிராமங்களில்கூட சமையல் எரிவாயு தட்டுப்பாடு உள்ளது. உண்மையான குற்றவாளி யார்? எல்.பி.ஜி. விநியோகம் எவ்வித இடையூறும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அவர்கள் ஏன் எங்களை குறைகூற வேண்டும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து