இந்தியாவில் 12 புதிய அணு உலைகள் நிறுவப்படும் - அணுசக்தி துறை தலைவர் பேச்சு

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019      உலகம்
nuclear industry 2019 04 20

மாஸ்கோ : மின் உற்பத்திக்காக இந்தியாவில் புதிதாக 12 அணு உலைகள் நிறுவப்படும் என்று ரஷ்யாவில் நடந்த கண்காட்சியில் பங்கேற்ற இந்திய அணுசக்தி துறைத் தலைவர் வியாஸ் கூறியுள்ளார்

ரஷ்யாவில் உள்ள கோச்சி என்ற நகரில் அண்மையில் 11-வது சர்வதேச அணுசக்தித் துறை கண்காட்சி நடந்தது. இந்த சர்வதேச கண்காட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புடின், இந்த நிகழ்ச்சி அணுமின் தொழில் நுட்பத்தில் ரஷ்யாவின் தற்போதைய நிலைக்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். இந்த சர்வதேசக் கண்காட்சியில், இந்திய அணுசக்தித் துறைத் தலைவர் கே.என். வியாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

அணுசக்தி தூய்மையானது மட்டுமல்ல, சாமானியர்களின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கக் கூடியது. தற்போது இந்தியாவில், கனநீர் கொண்டு இயங்கும் 18 அணு உலைகள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. மேலும், கனநீர் அடிப்படையிலான 10 புதிய உயர் அழுத்த அணுமின் உலைகளை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். அதோடு, மென்னீர் அடிப்படையில் செயல்படும் புதிய 2 அணு உலைகளை அமைக்கவும் திட்டமிட்டு வருகிறோம். இந்த 12 அணு உலைகளும் இந்தியாவில் நிறுவப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து