புதுமண ஜோடியை ஆற்றில் தத்தளிக்க விட்டு புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019      இந்தியா
new couple controversy 2019 04 20

திருவனந்தபுரம் : கேரளாவின் திருவல்லாவை சேர்ந்த திஜினுக்கும் சங்ஙனாசேரியை சேர்ந்த ஷில்பாவுக்கும் வரும் மே மாதம் 6-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. நிச்சயதார்த்தம், திருமணம், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை தாண்டி திரைப்பட பாணியில்  வெளிப்புற படப்பிடிப்பை நடத்த புதுமண ஜோடி திட்டமிட்டது. இதற்கான ஏற்பாடுகளை வெட்டிங் ஸ்டூடியோ நிறுவனம் செய்தது.

இதன்படி சில நாட்களுக்கு முன்பு கடம்மன்னிட்டா பகுதியில் பம்பை நதியில் புதுமண ஜோடியை படகில் அமர வைத்து வித்தியாசமாக வீடியோ, புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அப்போது தலைமை புகைப்பட நிபுணர் ராய் லாரன்ஸ், புதுமண ஜோடியை முத்தமிடக் கூறினார். இருவரும் முத்தமிட நெருங்கிய போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்தது. புதுமண ஜோடி ஆற்றில் விழுந்து தத்தளித்தது. புகைப்பட குழுவினர் அவர்களை மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து புகைப்பட குழுவை சேர்ந்த ஒருவர் கூறிய போது, புதுமண ஜோடியை வித்தியாசமாக வீடியோ, புகைப்படம் எடுத்தோம். திடீரென தோன்றிய யோசனையின்படி தம்பதியர் முத்தமிட முயன்ற போது கயிற்றை இழுத்து படகை கவிழ்த்து விட்டோம். இதை விபத்து என்றே அவர்கள் நினைத்தனர். நாங்கள் கூறிய பிறகுதான் அவர்களுக்கு உண்மை புரிந்தது என்றார். இந்த வீடியோ நகைச்சுவையாக இருக்கிறது என்று ஒரு தரப்பினரும் இது விபரீத விளையாட்டு என்று மற்றொரு தரப்பினரும் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து