முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிரத்தில் 17 தொகுதிகளுக்கு வரும் 29-ல் இறுதிக் கட்ட தேர்தல் இன்று பிரச்சாரம் நிறைவு

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை, மகராஷ்டிராத்தில் 17 தொகுதிகளுக்கு வரும் 29-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியும், ஷீரடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகின்றனர்.

மகராஷ்டிராத்தில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.  இந்த தொகுதிகளுக்கு 4 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி 7 தொகுதிகளுக்கும், 18-ம் தேதி 10 தொகுதிகளுக்கும், 23-ம் தேதி 14 தொகுதிகளுக்கும் என மொத்தம் 31 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து விட்டது.

4-வது மற்றும் இறுதிக்கட்டமாக வட மும்பை, வடமேற்கு மும்பை, வடகிழக்கு மும்பை, வடமத்திய மும்பை, தென்மத்திய மும்பை, தென்மும்பை, நந்துர்பர், துலே, தின்டோரி, நாசிக், பால்கர், பிவண்டி, கல்யாண், தானே, மாவல், சிரூர், ஷீரடி ஆகிய 17 தொகுதிகளுக்கு வருகிற 29-ம் தேதி (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் 17 தொகுதிகளிலும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது.  மும்பையில் உள்ள 6 தொகுதிகளில் பா.ஜ.க. - சிவசேனா கூட்டணி கட்சிகள் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

மகராஷ்டிராத்தில் கடைசி கட்ட தேர்தல் நடைபெற இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஒரே நாளில் பிரசாரம் செய்கிறார்கள். இதனால் மும்பை உள்ளிட்ட 17 தொகுதிகளில் தேர்தல்களம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து