முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பி.கே.என் 46-வது ஆண்டு பொருட்காட்சி கோலாகல துவக்கம்

திங்கட்கிழமை, 6 மே 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரிலுள்ள அருள்மிகு பத்திரகாளி மாரியம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் பி.கே.என் 46வது ஆண்டு பொருட்காட்சி நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக துவங்கியது.
திருமங்கலம் அருள்மிகு பத்திரகாளி மாரியம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பி.கே.என் மைதானத்தில் மே மாதம் 5ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பி.கே.என் 46வது ஆண்டு பொருட்காட்சி 21நாட்கள் நடைபெறுகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள்,விதவிதமான உணவு பொருட்கள் நிறைந்துள்ள  இந்த பொருட்காட்சியின் திறப்புவிழா நேற்று முன்தினம் இரவு வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் அருள்மிகு பத்திரகாளி மாரியம்மன் தேவஸ்தான டிரஸ்டி பி.பி.பி.சி.எஸ்.ரமேஷ்பாபு நாடார் கலந்து கொண்டு தலைமையேற்று திருமங்கலம் பி.கே.என் பொருட்காட்சியை ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் துவக்கி   வைத்து சிறப்புரையாற்றினார். பொருட்காட்சி  துவங்கிய முதல் நாளிலே திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்திருந்து பொழுது போக்கு அம்சங்களை கண்டுகளித்துச் சென்றனர்.
இவ்விழாவில் பாண்டியகுல சத்திரிய நாடார்கள் உறவின்முறை நாட்டாண்மைகள் நல்லதம்பிநாடார்,ஆர்.திருஞானம் நாடார், பி.சுரேஷ் கண்ணா நாடார்,வைகாசி உற்சவவிழா சிறப்பு கமிட்டி தலைவர் பாலமோகன் நாடார், செயலாளர் மாஸ்கோ.செல்வம் நாடார், பொருளாளர் விஜயகுமார் நாடார் மற்றும் உறவின்முறை,பள்ளி கல்லூரி கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து