முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டிவீரன்பட்டி ஸ்ரீபத்திரகாளியம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத திருவிழா

வெள்ளிக்கிழமை, 10 மே 2019      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு - திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள பட்டிவீரன்பட்டியில் உள்ள ஸ்ரீபத்திரகாளியம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. பட்டிவீரன்பட்டியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழா வெகுவிமர்சையாக 3 நாட்கள் வெகுதவிமர்ச்சையாக நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான திருவிழா செவ்வாய்கிழமை(7.5.19) துவங்கியது. முதல் நாள் ஸ்ரீகருப்பணசாமி பூஜை, பூசாரி அழைப்பு மற்றும் புலிஆட்டம்,ஒயிலாட்டம் வானவேடிக்கை, மேளதாளம் முழங்க அம்மன் கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், சுவாமி முளைப்பாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று முன்தினம்( 8.5.19) மாவிளக்கு பூஜை, பெரியவர்கள், சிறியவர்கள் பால்குடம் எடுத்தல் மற்றும் அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று அதிகாலை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற சிறப்பு 1008 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான முளைபாரி ஊர்வலத்துடன் மேளதாளம் முழங்க பத்திரகாளியம்மன் பூஞ்சோலைக்கு சென்றடைதலுடன் விழா நிறைவடைந்தது.
இவ்விழாவில் சிறப்பு அன்னதானம் மற்றும் உற்சவவிருந்து ஆகியவை நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துநாடார்கள் உறவின்முறை பரிபாலன சங்க நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் இணைந்து செய்திருந்தனர். விழாவினை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள்  மற்றும் வானவேடிக்கைகள் நடைபெற்றன. விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பட்டிவீரன்பட்டி போலீசார் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து