முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா பானர்ஜி மீது பட்னாவிஸ் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 15 மே 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் நடைபெற்ற தாக்குதலுக்கு மம்தாவின் தோல்வி பயமே காரணம் என தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டினார்.  

கொல்கத்தா நகரில்  நடைபெற்ற பாஜக பேரணியில் அக்கட்சி தலைவர் அமித்ஷா பங்கேற்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து சுமார் 7 மணியளவில் கல்லூரி சாலைக்குள் பேரணி நுழைந்தபோது அமித் ஷா வந்த பிரசார வாகனத்தின் மீது சில கம்புகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

பேரணியில் வந்தவர்களுக்கும் வேறொரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. சாலையோரத்தில் இருந்த கட் அவுட்டுகள் அடித்து நாசப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது. பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொல்கத்தாவில் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் நடந்த தாக்குதலுக்கு மம்தாவின் தோல்வி பயமே காரணம் என மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டினார். 

இதுதொடர்பாக அவர் கூறுகையில், மம்தா பானர்ஜிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா பேரணியில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

மேர்கு வங்காளத்தில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து வருகிறார். தன்னை எதிர்த்து யாரும் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என அவர் செயல்பட்டு வருகிறார்.

எனவே, பாராளுமன்ற தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து