நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் : பிரபல இந்திய வீராங்கனை அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2019      விளையாட்டு
Chant Chand-2019 05 19

Source: provided

புது டெல்லி : நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன் என்று இந்தியாவின் பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் துத்தி சந்த். பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனையான இவர் இந்தியா சார்பாக 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், 100 மீ மற்றும் 200 மீ போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர்.

தற்போது அவர் சர்வதேச தடகளப் போட்டிகளுக்கும், அவை முடிந்த பின்னர் 2020 -ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கும் தயாராகி வருகிறார். இந்நிலையில் நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன் என்று துத்தி சந்த் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஒடிசா மாநிலத்தில் எனது சொந்த ஊரான சக்கா கோபாலபுரில் உள்ள ஒரு பெண்ணை நான் விரும்புகிறேன்.

ஒவ்வொருவரும் தாங்கள் யாரை விரும்புகிறார்களோ, அவர்களுடன் வாழவதற்கான சுதநதிரம் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். தன் பாலின உறவை மேற்கொள்வோர்களின் உரிமைகளை எப்போதுமே நான் ஆதரித்து வந்துள்ளேன்.

அது தனிப்பட்ட ஒருவரின் உரிமையாகும். தற்போது என்னுடைய குறிக்கோள் எல்லாம் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பின்னர் ஒலிம்பிக் போட்டிகளிலும்தான் உள்ளது. ஆனால் நான் இறுதியாக அவளுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து