ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா

புதன்கிழமை, 22 மே 2019      உலகம்
Russian fighter jets 2019 05 22

வாஷிங்டன் : ரஷ்யாவின் போர் விமானங்களை அலாஸ்கா அருகே இடைமறித்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண வான்பரப்புக்கு அருகே ரஷ்யாவின் 6 போர் விமானங்கள் பறந்ததாக அமெரிக்காவின் வடக்கு வான் பாதுகாப்பு கட்டளையகம் தெரிவித்துள்ளது. அந்த 6 போர் விமானங்களில், குண்டு வீசும் திறன் கொண்ட டியூ-95 மற்றும் சுகோய் 35 ரக போர் விமானங்களும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

அவற்றை, தங்கள் நாட்டின் எப் - 22 விமானங்கள் மூலம் இடைமறித்து திருப்பி அனுப்பியதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. அச்சுறுத்தலை கண்டுபிடிக்கவும், முறியடிக்கவும் 365 நாட்களும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து