பா.ஜ.க.விற்கு வாக்களிக்காத தமிழக மக்கள் விரைவில் வருத்தப்படுவார்கள்: தமிழிசை

வியாழக்கிழமை, 23 மே 2019      இந்தியா
tamilisai 2018 11 11

தூத்துக்குடி, தமிழக மக்கள் ஏன் பா.ஜ.க.விற்கு வாக்களிக்கவில்லை என்பதை விரைவில் உணர்வார்கள் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

தமிழக மக்களிடமிருந்து வாக்குகளை பெற முடியாத நிலையில் ஆத்ம பரிசோதனை செய்யும் நிலையில் உள்ளோம். தமிழகத்தில் நிலவிய தொடர் மோடி எதிர்ப்பே தோல்விக்கு காரணம். தமிழக மக்கள் ஒரே மாதிரி வாக்களிக்கும் சூழல் வியப்பளிக்கிறது. நாங்கள் வெற்றி பெற்றிருந்தால் தமிழகத்திற்கு உரிமையோடு பல நல்ல திட்டங்களை கேட்டு கொண்டு வர ஏதுவாக இருக்கும். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க.விற்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து