முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருகே ரூ.1.53கோடியில் மோட்டார் வாகன பகுதி அலுவலகம் கட்டுவதற்கான பூமிபூஜை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பணிகளை தொடங்கி வைத்தார்:

வெள்ளிக்கிழமை, 7 ஜூன் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டியில் ரூ.1.53 கோடி மதிப்பீட்டில் புதிதாக மோட்டார் வாகன பகுதி அலுவலகம் கட்டுவதற்கான பூமிபூஜையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் திருமங்கலம் வட்டம் வட்ட மோட்டார் வாகன பகுதி அலுவலகம் தற்காலிக அலுவலகத்தில் செயல்பட்டு வந்தது.இடநெருக்கடி மற்றும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் புதிய வாகனங்களை பதிவு செய்திட வருபவர்களும்,புதிய டிரைவிங் லைசன்ஸ்,லைசன்ஸ் புதுப்பித்தல்,பதிவு சான்று பெயர் மாற்றம்,விபத்தில் சிக்கிய வாகனங்களை ஆய்விற்காக கொண்டு வருபவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.இது பற்றி தகவலறிந்த தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேற்கொண்ட முயற்சியின் பலனாக திருமங்கலம் வட்டம் ஆலம்பட்டி பகுதியில் அதிக பரப்பளவு கொண்ட இடத்தில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய அதிநவீன மோட்டார் வாகன பகுதி அலுவலகம் கட்டிட ரூ.1.53கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளியிட்டது.
இதையடுத்து திருமங்கலம் வட்டம் ஆலம்பட்டி கிராமத்தில் ரூ.1.53கோடி மதிப்பீட்டில் புதிய மோட்டார் வாகன பகுதி அலுவலகம் கட்டும் பணிகளுக்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது.இவ்விழாவிற்கு மதுரை கலெக்டர்(பொறுப்பு) சாந்தகுமார் தலைமை வகித்தார்.பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வி.சுகுமாறன்,வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ்,உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உதவி பொறியாளர்கள் மணிவண்ணன்,சண்முகன் ஆகியோர் வரவேற்றனர்.இந்த பூமிபூஜை விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருமங்கலம் வட்டத்தில் ரூ.1.53கோடி மதிப்பீட்டில் புதிய மோட்டார் வாகன பகுதி அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.472 சதுரமீட்டர் தரைத்தள பரப்பளவு கொண்ட இந்த அலுவலகத்தின் பணிகள் எட்டு மாதங்களில் முழுவதுமாக நிறைவடைந்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன்,முன்னாள் திருமங்கலம்யூனியன் சேர்மன் தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணி,திருமங்கலம் ஒன்றிய துணைச் செயலாளர் சுகுமார்,இணைச் செயலாளர் சுமதிசாமிநாதன் கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன்,செல்வம்,தர்மர்,பிரபுசங்கர்,வக்கீல் முத்துராஜா,ராஜசேகர்,சாமிநாதன்,கோடீஸ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து