முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2019      வர்த்தகம்
Image Unavailable

லிவான கட்டணத்தில் 5 ஜி சேவை கிடைக்கும் வகையில், ரூ. 6 லட்சம் கோடி அளவு ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

கிராமப்புறங்களுக்கும் டிஜிட்டல் சேவை கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டத்திற்கு, டிஜிட்டல் தொலைதொடர்பு ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் 8,600 மெகாஹெர்ட்ஸ் 'மெபைல் ஏர்வேவ்ஸ்' ஏலம் நடக்க உள்ளது.

தொலைதொடர்புத்துறை செயலர் அருணா சுந்தர்ராஜன் கூறுகையில், நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் விடப்பட்டாலும், அரசுக்கு ரூ.5.8 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும். இருப்பினும், வருமானத்தை மட்டும் அரசு கணக்கில் கொள்ளவில்லை. தொலைதொடர்பு சேவைகள் அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும் எனவே அரசு விரும்புகிறது என்றார். முந்தைய ஏலத்தில், ஸ்பெக்ட்ரம் ஏலம் எதிர்பார்த்தபடி இல்லை. 40 சதவீதம் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டது. இதற்கான காரணத்தை ஆராயும்படி 'டிராய்'க்கு டிஜிட்டல் தொலைதொடர்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், டிராய், தனது புதிய விதிமுறைகள் அகண்ட அலைவரிசை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பிரதமரின் கொள்கைகளுக்கு உகந்ததாக உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஸ்மார்ட் கார்கள், நகரங்களுக்கு மட்டும் 5ஜி சேவை பயன்படக்கூடாது. கிராமப்புற சுகாதாரம் மற்றும் கல்விக்கும் 5 ஜி சேவைகள் பயன்பட வேண்டும் என்றார்.

தொலைதொடர்பு நிறுவனங்களின் நிதிநிலைமையை அறிந்துள்ள மத்திய அரசு, ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் புதிய நிறுவனங்களும் பங்கேற்கும்படி திட்டங்கள் வகுக்கும்படி டிராய்க்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் 5ஜி சேவைக்கான சோதனை திட்டத்தையும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சோதனையில் வழக்கமான நிறுவனங்கள் பங்கேற்பதுடன், தொலைதொடர்பு சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்களும் இதில் பங்கேற்க வைக்க அரசு திட்டமிட்டுள்ளது. கல்வி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் 5ஜி சோதனையில் பங்கேற்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. 5ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் எடுக்கும் நிறுவனங்கள், அதனை 5 ஆண்டுகள் விற்பனை செய்ய முடியாது. 5ஜி சோதனை முயற்சி, ஸ்பெக்ட்ரம் ஏலம் ஆகியவை சுமூகமாக நடக்கவே இந்த முடிவு எடுத்துள்ளது.டிஜிட்டல் சேவைகள் மற்றும் 5ஜி சேவையை கிராமங்களில் அதிகளவில் கிடைக்க, பொது மக்கள் தனியார் ஒத்துழைப்பு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது. இதன்படி, நாடு முழுவதும் 3 லட்சம் பொது சேவை மையங்கள் மூலம், ஒரு லட்சம் கிராம பஞ்சயத்துகளில் இரண்டு வைபை ஹாட்ஸ்பாட்கள் மற்றும் அதிவேக இணைய இணைப்புகளை வழங்க முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து