அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வரும் 25-ல் இந்தியா வருகை

வியாழக்கிழமை, 20 ஜூன் 2019      இந்தியா
Mike Pompeo 2019 06 20

புது டெல்லி : அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ அடுத்த வாரம் இந்தியா வருகிறார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது

இந்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்க அரசின் வெளியுறவு துறை அமைச்சரான மைக் பாம்பியோ வரும்  25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியாவுக்கு வருகை தரும் மைக் பாம்பியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து