புதிய ராணுவ அமைச்சரை தேர்வு செய்தார் அதிபர் டிரம்ப்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2019      உலகம்
military minister elected trump 2019 06 23

வாஷிங்டன் : அமெரிக்காவுக்கு புதிய ராணுவ அமைச்சராக மார்க் எஸ்பரை டிரம்ப் தேர்வு செய்துள்ளார். 

வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு, ஈரான் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு திடீரென விலகியது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான உறவு மிக மோசமாகி வருகிறது. சமீபத்தில் கூட அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து ஈரானின் 3 ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டு, பின்னர் கடைசி நேரத்தில் திரும்பப் பெற்றார். இந்த நெருக்கடியாக கால கட்டத்தில் இப்போது அமெரிக்காவில் ராணுவ அமைச்சர் பதவி காலியாக உள்ளது. ராணுவ அமைச்சராக இருந்து வந்த ஜிம் மேட்டிஸ் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி பதவி விலகினார். அதைத் தொடர்ந்து ராணுவ அமைச்சர் பொறுப்பை வகித்து வந்த பேட்ரிக் ஷனகன் அந்தப் பதவியில் தொடர விரும்பவில்லை.  இந்த நிலையில் புதிய ராணுவ அமைச்சராக 55 வயதான மார்க் எஸ்பர்  என்பவரை அதிபர் டிரம்ப் தேர்வு செய்தார். இவரது நியமனத்துக்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். செனட் சபையில் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் மார்க் எஸ்பர் நியமனத்துக்கு ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல் ஏதும் இருக்காது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து