வெஸ்ட் இண்டீஸ் அணியில் அம்பரிஸ்!

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      விளையாட்டு
Sunil Ambaris 2019 06 25

உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆல் ரவுண்டர் அந்த்ரே ரஸல் இடம் பிடித்திருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன், அவருக்கு மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை.

இந்நிலையில், காயம் குணமாகாததால், அவர் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, சுனில் அம்ப்ரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அம்பரிஸ் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 105.33 சராசரி வைத்துள்ளார். சமீபத் தில் அயர்லாந்தில் நடந்த முத்தரப்பு தொடரில் 148 ரன்கள் விளாசி இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி, அடுத்த போட்டியில் இந்தியாவை 27-ம் தேதி எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து