முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது அணியாக டெஸ்ட் வரலாற்றில் மே.இ.தீவுகள் அணி மோசமான சாதனை

செவ்வாய்க்கிழமை, 15 ஜூலை 2025      விளையாட்டு
West-Indies 2024-05-09

Source: provided

சபினா பார்க் :  ஒரு இன்னிங்சில் மிகக் குறைந்த ஸ்கோரைப் பதிவுசெய்த 2-வது அணி எனும் மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணி படைத்துள்ளது.

பகலிரவு ஆட்டம்...

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக ஜமைக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 225 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 80 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

202 ரன்கள் இலக்கு...

பின்னர் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 121 ரன்களில் ஆல் அவுட்டாகி 202 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 27 ரன்களில் ஆல் அவுட்டானதுடன் 176 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகளையும் வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 ஆவது டெஸ்ட் போட்டியையும் வென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

மிகக் குறைந்த ஸ்கோர்...

இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 14.3 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு வெறும் 27 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் மிகக் குறைந்த ஸ்கோரைப் பதிவுசெய்த 2-வது அணி எனும் மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணி படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 1955-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணி 26 ரன்களுக்கு ஆல் அவுடானதே மோசமான சாதனையக இருந்து வருகிறது.

தென் ஆப்பிரிக்க அணி...

இதற்கடுத்த மூன்று குறைந்தபட்ச ஸ்கோரை தென் ஆப்பிரிக்க அணி பதிவுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி 1896-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 30 ரன்களிலும், 1924-ம் ஆண்டு 30 ரன்னிலும், 1899-ம் ஆண்டு 35 ரன்களிலும் என ஒரு இன்னிங்சில் ஆல் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து