முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலிபோர்னியாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகாக பதிவாகியிருந்ததால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் உள்ள ரிட்ஜ்கிரெஸ்ட் நகரின் அருகே மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகாக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் ஏற்கனவே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதிக்கு உள்ளாக்கிய நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து