முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக நாளை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கூட்டம் - முதல்வர் தலைமையில் நடைபெறுகிறது

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக நாளை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். சார்ந்த மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்டார். அப்போது நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-

சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 8 -ம் தேதி மாலை 5.30 மணியளவில் முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு ஆலோசிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக சட்டசபையில் விவாதம் எழுந்தது. அப்போது மருத்துவ படிப்புகளில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் அறிவித்தனர். அதன்படி 8-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து