முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக பா.ஜ.க. தலைமை ஓரிரு மாதங்களில் மாற்றம் - நடிகர் எஸ்.வி. சேகர் திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக பா.ஜ.க. தலைமை அடுத்த மாதம் மாற்றப்படும் என்று நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி மந்தவெளியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் எஸ்.வி.சேகர் கூறியதாவது:-

நான் தமிழக பா.ஜ.க.வில் சேர்ந்தது முதல் என்னை எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை. வாஜ்பாய் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சிக்காக மட்டும் கூப்பிட்டார்கள். எதற்காக என்னை அழைப்பதில்லை என்பதெல்லாம் எனக்கு தெரியாது. எல்லா பிரச்சினைகளும் சரியாகி விடும். தமிழக பா.ஜ.க.தலைமை மாற்றப்பட வேண்டும். நிச்சயமாக மாற்றப்படும். அடுத்த மாதம் (ஆகஸ்டு) அல்லது செப்டம்பருக்குள் அது நடக்கும். தி.மு.க. இளைஞர் அணி தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டிருப்பது அந்த கட்சியின் உள் விவகாரம். ஏற்றுக் கொள்வது, ஏற்றுக் கொள்ளாதது என்பதெல்லாம் தி.மு.க.வினரின் முடிவு. ஆனால் வாரிசு அரசியல் செய்ய தி.மு.க. ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று கலைஞர் தெரிவித்து இருந்தார். அதை மு.க.ஸ்டாலின் பொய்யாக்கி இருக்கிறார் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து