முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2019      ஆன்மிகம்
Image Unavailable

சிதம்பரம் : கடலூரில் ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. 

பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குவது கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில். உலக புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இக்கோவிலில் ஆனந்த நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் ஆனி, மார்கழி மாதம் நடைபெறும் மகாஅபிஷேகம் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.

இதனிடையே ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த 5 தேர்களையும் திரளாக கூடியிருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து