கோப்பையை வெல்லவேண்டும் என்று வந்தோம்: ஆனால் அது நடக்கவில்லை : ஆரோன் பிஞ்ச்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2019      விளையாட்டு
Aaron Finch-12-07-2019

Source: provided

கோப்பையை வெல்ல வேண்டும் என்று வந்தோம் ஆனால் அது நடக்கமால் போய்விட்டது வருத்தமாக இருக்கிறது என்று ஆஸ்திரேலியா கேப்டன்  கூறினா்.
அரை இறுதியில் தோற்றது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியதாவது:-

நாங்கள் அனைத்து துறையிலும் மோசமாக விளையாடி விட்டோம். அவர்கள் எங்களின் முதல் 3 விக்கெட்டை விரைவில் வீழ்த்தி விட்டனர். இந்த உலகக்கோப்பை தொடரில் கற்றுக்கொள்ள நிறைய நல்ல வி‌ஷயங்கள் இருக்கிறது. நீங்கள் எப்போதுமே வெற்றி பெறவே விரும்புவீர்கள்.நம்மால் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்துடன்தான் வருவார்கள். கடந்த 6 மாதங்களாக கூட நிறைய நேர்மறை எண்ணங்கள் இருந்தன. ஆனால் இந்த தோல்வி காயத்தை ஏற்படுத்திவிட்டது.இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது விக்கெட்டுகளை வீழ்த்தும் வாய்ப்புகளை எதிர்பார்த்தோம். அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள் இங்கிலாந்து அணியினர் எவ்வளவு ஆற்றல் வாய்ந்தவர்கள்,

ஆதிக்கம் நிறைந்தவர்கள் என்பதை அறிவோம். என்றாவது ஒரு நாளில் நமது திறமையை செயல்படுத்த முடியாமல் போய்விடும். இதனால் ஒரு நல்ல அணியான நீங்கள் கூட தோல்வி அடைந்து விடுவீர்கள்.சில வீரர்கள் காயத்துடன் இங்கு வந்தார்கள். ஆனால் அதை தோல்விக்கு காரணமாக சொல்லக்கூடாது. கோப்பையை வெல்ல வேண்டும் என்றுதான் இங்கு வந்தோம். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது.இவ்வாறு ஆரோன் பிஞ்ச் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து