முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவுண்டரி எண்ணிக்கை விதி குறித்து ஐ.சி.சி. மீது கவுதம் காம்பீர் சாடல்

திங்கட்கிழமை, 15 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றியை நிர்ணயிப்பதற்கு பவுண்டரி எண்ணிக்கை விதியை பயன்படுத்தியதை இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கடுமையாக சாடியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தலா 241 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதிலும், இரண்டு அணிகளும் சமமான ரன்களையே (15 ரன்கள்) எடுத்தன.

இதனால், பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இந்த விதியின்படி போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இந்த விதியின்படி, அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி (26) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, உலகக் கோப்பை வழங்கப்பட்டது. ஐ.சி.சி.யின் இந்த விதியால் நியூசிலாந்து அணியின் வெற்றிக் கனவு தகர்ந்தது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பிர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஐ.சி.சி.யின் இந்த விதியை கடுமையாக சாடி உள்ளார்.இந்த விதியை பயன்படுத்தி எப்படி இறுதி முடிவு எடுத்தார்கள்? என்பது புரியவில்லை. ஐ.சி.சி.யின் இந்த விதி ஆபத்தமான விதி. போட்டி டையில் முடிந்திருப்பதால், கடைசி வரை சிறப்பாக விளையாடிய இரண்டு அணிகளுக்கும் நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். என்னைப் பொருத்தவரை இரண்டு அணிகளுமே வெற்றியாளர்கள்தான் என்று காம்பீர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து