முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

நியூயார்க் : பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் போலவே, கூகுள் நிறுவனமும் புதியதாக ஷோலேஷ் என்ற சமூக வலைதளத்தை உருவாக்கியுள்ளது.

ஆர்குட்-க்கு பிறகு கூகுள் பிளஸ் சமூக வலைதள சேவையை கூகுள் அறிமுகம் செய்தது. ஆனால், அது பெரிய அளவில் வெற்றி பெறாததை அடுத்து, தற்போது ஷோலேஷ் என்ற சமூக வலைதளம் மூலம் கூகுள் களமிறங்கியுள்ளது. இந்த ஷோலேஷ் சமூக வலைதளம் போன்று தான் என்றாலும் மொபைல் செயலி வடிவில் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட சீன சமூக வலைதள செயலியான ஹலோ, ஷேர்சாட் போன்றவற்றுக்கு போட்டியாக ஷோலேஷ் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது ஷோலேஷ் சமூக வலைதள செயலி சேவை நியூயார்க் நகரத்தில் மட்டும் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் பிற நாடுகள், நகரங்களிலும் ஷோலேஷ்சேவை கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. பல முறை பேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக சமூக வலை தளத்தை உருவாக்க முயன்று தோல்வியை மட்டுமே சந்தித்துள்ள நிலையில், ஷோலேஷ் வெற்றியை தருமா? என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து