ரூ.2,567 கோடியில் 960 கி.மீ சென்னை மாநகரில் மின்கம்பிகளை புதைவடமாக்கும் பணிகள் தீவிரம்: மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      தமிழகம்
thangamani 23-10-2018

ரூ.2, 567 கோடி மதிப்பீட்டில் 960 கிலோ மீட்டர் அளவுக்கு மின்கம்பிகளை புதைவடத் தளமாக அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக சட்டசபையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

.தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பெரம்பூர் தொகுதி திமுக உறுப்பினர் சேகர்: பேசுகையில் தன்னுடைய தொகுதியில் உள்ள 34 மற்றும் 35-வது வார்டுகளில் மேலே செல்லும் மின் கம்பிகளை புதைவடமாக மாற்றி தரப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர். தங்கமணி: பெரம்பூர் பகுதி உட்பட, சென்னையில் 960 கிலோ மீட்டர் அளவுக்கு புதைவடத் தளமாக அமைப்பதற்குண்டான பணிகள் ரூ.2,567 கோடி செலவிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆகவே, ஒவ்வொரு பகுதியாக இப்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் தொகுதியிலே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் தொகுதியிலும் அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. சென்னை மாநகரைப் பொறுத்தவரையில் முழுவதுமாக புதைவடத் தளமாக அமைக்க வேண்டுமென்பதுதான் அரசினுடைய நோக்கம். நிதி நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு பகுதியாக நாங்கள் அந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கின்றோம். பெரம்பூரைப் பொறுத்தவரைக்கும், ஏற்கெனவே டெண்டர் விடப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து