முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் தலைவராகும் வாய்ப்பை பிரியங்காவே முடிவெடுக்க வேண்டும் - முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ள நிலையில் அந்த வாய்ப்பை பிரியங்காவே முடிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்தியஅமைச்சர் நட்வர் சிங் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தார். ராஜினாமா முடிவை கைவிடுங்கள் என்று 5 மாநில காங்கிரஸ் முதல்வர்கள் மற்றும்  மரணம் அடைந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்டோர்  ராகுலை சந்தித்து வலியுறுத்தியும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்கப்பட்டால் தலைவர் பதவியில் அவரது தங்கை பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான நட்வர் சிங் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக பிரியங்கா காந்திதான் தீர்மானிக்க வேண்டும். ஏற்கனவே, காந்தி குடும்பத்தில் இருந்து வராத யாராவது ஒருவர்கூட காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ஆகலாம் என்று ராகுல் தெரிவித்திருந்தார். இந்த முடிவில் இருந்து அவரது குடும்பம் தற்போது பின்வாங்க வேண்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து