திருப்பதி லட்டுக்கு வயசு 304: தேவஸ்தானம்

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2019      ஆன்மிகம்
tirupathi laddu 2019 08 03

திருப்பதி : உலக பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையானுக்கு விசே‌ஷ பிரசாதமாக படைக்கப்படும் லட்டு மிகவும் பிரபலம். அந்த லட்டு சுவையும் சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கிறது. திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டின் வயது 304 என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1715-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ம் தேதியில் இருந்து பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. 1803-ம் ஆண்டில் இருந்து பிரசாதங்களை வர்த்தக ரீதியாக பக்தர்களுக்கு விற்கும் முறை தொடங்கியது. 304 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொட்டு என்னும் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. நாள் தோறும் 2 லட்சம் முதல் 3 லட்சம் லட்டுகள் வரை தயாரிக்கப்படுகின்றன. உற்சவ நாட்களில் 5 லட்சம் லட்டுகள் வரை சேமிப்பில் வைக்கப்படுகின்றன.

2009-ம் ஆண்டு திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. லட்டு பிரசாத விற்பனையில் மட்டும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு மாதம் ரூ. ஒரு கோடி வரை வருமானம் கிடைக்கிறது. இந்த லட்டு கடலை மாவு, சர்க்கரை, நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி, கல்கண்டு, உலர் திராட்சை, குங்குமப்பூ ஆகியவைகளை குறிப்பிட்ட அளவில் அதற்கென உள்ள முறைப்படி சேர்த்து தயாரிக்கப்படுகிறது. மொத்தம் 270 சமையல்காரர்கள் உள்பட 600 பேர் சேர்ந்து இந்த லட்டுகளை தயாரிக்கின்றனர். மாறாத மணம், சுவை, அளவு ஆகியவை லட்டின் சிறப்பு அம்சமாக திகழ்கிறது. எனவே தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிரியமான கடவுள் பிரசாதமாக திருப்பதி லட்டு விளங்குகிறது. லட்டு என்பது சமஸ்கிருத வார்த்தையான லட்டுகா என்பதன் சுருக்கம் ஆகும். அதற்கு சின்னபந்து என்று பொருள். திருப்பதி லட்டும் பந்து வடிவில் இருப்பதால் அதற்கு இந்த பெயரே நிலைத்து விட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று எல்லா மொழிகளிலும் அது லட்டு என்றே சொல்லப்படுகிறது. ஒருவர் வெறுமனே ஆசைப்பட்டால் மட்டும் அவரது கைகளுக்கு திருப்பதி லட்டு வந்து விடாது. அந்த பிரசாதம் அவரது கைக்கு கிடைக்க வேண்டும் என்று பெருமாள் நினைக்க வேண்டும். அப்போது தான் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவரது கைக்கு லட்டு வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து