திண்டுக்கல்லில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான கால்பந்து போட்டிகள் துவங்கியது.

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2019      திண்டுக்கல்
6  dglsports

திண்டுக்கல். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் மாணவர்களுக்கிடையே20 பள்ளிகளை சார்ந்த அணிகளும் மற்றும் மாணவிகளுக்கிடையே8  பள்ளிகளை சார்ந்த அணிகளும் மோதுகின்றன. துவக்க நாளில் திண்டுக்கல் S.M.B. M மெட்ரிக் பள்ளி மற்றும் திண்டுக்கல் நேருஜி நினைவு மேல்நிலைப் பள்ளி ஆகியவைகளுக்கிடையே நடைபெற்ற முதல் போட்டியினை திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக தலைவர் G.சுந்தரராசன் துவக்கிவைத்தார். மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். முதல் போட்டியின் முடிவில் 2 : 0 என்ற கோல் கணக்கில் நேருஜி நினைவு மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்றது.இறுதி போட்டி மற்றும் பரிசு வழங்கும் விழா வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. போட்டிகளை திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் நடத்தி வருகின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து