38-வது நாள்: மஞ்சள் மற்றும் ரோஜா நிற பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2019      ஆன்மிகம்
athivarathar darshan 2019 08 07

காஞ்சீபுரம் : காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்தின் 38-வது நாளான நேற்று  மஞ்சள் மற்றும் ரோஜா நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சியளித்து மக்களுக்கு தரிசனம் அளித்தார். 

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து  வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்த அத்திவரதர் தற்போது நின்றகோலத்தில் காட்சி தருகிறார். அத்திவரதர் வெள்ளை மற்றும் நீல நிற பட்டாடையில் நின்ற கோலத்தில் நேற்று முன்தினம் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முதியோர், மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் அத்திவரதரை தரிசித்தனர். அவர்களுக்கு வசதியாக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்தின் 38-வது நாளான நேற்று அத்திவரதர் மஞ்சள் மற்றும் ரோஜா நிற பட்டாடையில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். பொதுமக்கள் நீண்ட வரிசையில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து