முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2011-18 ஆண்டு கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : 2011 முதல் 2018 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் நடைபெறும் விழாவில் வழங்குகிறார்.

தமிழகத்தில் திரையுலக நட்சத்திரங்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருதுகள் விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டபேரவையில் அறிவித்தார். இதற்கான விழா இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் கலைமாமணி விருதுகளையும் கலைஞர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் அகில இந்திய அளவில் விருதுகளை பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். துணமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன், உள்ளிட்ட அமைச்சர்கள், நடிகர் , நட்சத்திரங்கள் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து