Idhayam Matrimony

விமான விபத்தில் டெல்லியை சேர்ந்த இரு விமானிகள் பலி

புதன்கிழமை, 28 ஜனவரி 2026      இந்தியா
plane-crash-2026-01-28

புனே, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்த விமான விபத்தில், அந்த விமானத்தை இயக்கிய பைலட்டுகள் சுமீத் கபூர் , ஷாம்பவி பதக் ஆகியோரும் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் டெல்லியைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார்,  நேற்று காலை விமான விபத்தில் பலியானார் . அவருடன் பயணித்த அனைவரும் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதறி உயிரிழந்துள்ளனர். இந்த சிறிய ரக விமானத்தை பைலட்டுகள் கேப்டன் சுமித் கபூர் மற்றும் கேப்டன் ஷாம்பவி பதக் ஆகியோர் இயக்கியுள்ளனர். இவர்கள் இருவருமே அனுபவம் வாய்ந்த மற்றும் நன்கு பயிற்சி பெற்றவர்கள் பைலட்டுகள் என்பதை வி.எஸ்.ஆர். ஏவியேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண் விமானியான கேப்டன் ஷாம்பவி பதக், ராணுவ அதிகாரி ஒருவரின் மகள். இந்த விமானத்தின் தலைமை பைலட்டாக இருந்தார். இவர் விமானப்படை பால் பாரதி பள்ளியில் பயின்றவர். மும்பை பல்கலையில் ஏவியேஷன் மற்றும் ஏரோஸ்பேஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். மேலும், நியூசிலாந்து சர்வதேச வணிக விமானிகள் அகாடமியில் பயிற்சி பெற்றவர். கேப்டன் சுமித் கபூரும் ஒரு தலைமை விமானியாகப் பணியாற்றி வந்தவர். விமானம் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நேரங்களில் விமானக் குழுவினரை வழிநடத்தும் பொறுப்பில் இவர் இருந்தார். இருவருமே டெல்லியைச் சேர்ந்தவர்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து