எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போர்ப் ஆப் ஸ்பெயின்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நாளை போர்ட் ஆப் ஸ்பெயின் நடக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. போர்ட் ஆப் ஸ்பெயினிஸ் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 59 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்று தொடரை வெல்லுமா? என்ற ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். கடந்த போட்டியில் கோலி சதம் அடித்து அசத்தினார்.
தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், ரோகித் சர்மா நல்ல அடித்தளம் அமைத்து கொடுப்பது அவசியம். அதேபோல் ரிஷப் பந்த், கேதர் ஜாதவ் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, கலீல் அகமது, குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளனர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளதால் தொடரை வெல்ல முடியும் என்று இந்திய வீரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் களம் இறங்குகிறது. தோற்றால் தொடரை இழக்க வேண்டியதுதான். இதனால் தொடரை சமன் செய்ய வெற்றிக்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முயற்சிப் பார்கள்.
அந்த அணியில் கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ், ஷாய் ஹோப், ஹெட்மையர், நிகோலஸ் பூரன் போன்ற பேட்ஸ்மேன்கன் உள்ளனர். பந்து வீச்சில் காட்ரெல், கேமர் ரோச், ஹோல்டர், தாமஸ், பிராத்வைட், ராஸ்டன் சேஸ் ஆகியோர் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி வீரர்கள் இருந்தாலும் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்த திணறி வருகிறார்கள். எனவே அதனை சரி செய்து வெற்றி பெற முயற்சிப்பார்கள் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |