முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுதக் கொள்கை மாற வாய்ப்புள்ளது: ராஜ்நாத் சிங்

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

எதிரி நாடுகள் பயன்படுத்தினால் பதில் தாக்குதலுக்கு மட்டுமே அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என்பதே இந்தியாவின் கொள்கையாக உள்ளது. ஆனால், எதிர்கால சூழ்நிலைக்கு ஏற்ப நாட்டின் அணு ஆயுதக் கொள்கை மாற வாய்ப்புள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீர் சிறப்பு சட்டப் பிரிவு நீக்கத்துக்குப் பின்னர் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதிகளவிலான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் எல்லைப் பகுதியில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி தாக்கும் சம்பவம் தீவிரமடைந்துள்ளதாகவும், மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் பயங்கரவாதிகள் ஊடுருவி வருவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் போன்ற பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில், எதிரி நாடுகள் பயன்படுத்தினால் பதில் தாக்குதலுக்கு மட்டுமே அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என்பதே இந்தியாவின் கொள்கையாக உள்ளது. ஆனால், எதிர்கால சூழ்நிலைக்கு ஏற்ப நாட்டின் அணு ஆயுதக் கொள்கை மாற வாய்ப்புள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தெரிவித்தார். முன்னதாக, பொக்ரானில் வாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். அப்போது வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்த இதுவே சரியான இடமாகும் எனவே இங்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து