தி.மு.க.வும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019      இந்தியா
Tamilisai soundararajan 2019 04 10

கடலூர் : தி.மு.க.வும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கடலூரில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பால் முகவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கூறிய ஸ்டாலின் தற்போது விலை உயர்வை அரசியலாக்குகிறார். இந்தியாவில் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீருக்கு பாகிஸ்தான் உரிமை கோருவதை தி.மு.க. ஆதரிக்கிறதா? என சந்தேகம் எழுகிறது. தி.மு.க.வும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள். காமராஜர் அறிவுரையை கேட்டு வளர்ந்ததாக கூறும் ஸ்டாலின் மெரினாவில் ஏன் நினைவிடம் அமைக்கவில்லை. மூப்பனார் பிரதமராவதை தடுத்தது தி.மு.க. தான். அப்துல் கலாமை ஜனாதிபதியாகும் போது எதிர்த்ததும் தி.மு.க. தான். தி.மு.க.வில் தொண்டர்கள் யாரும் தலைவராக வர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து