முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? கர்நாடக முதல்வர் எடியூரப்பா விளக்கம்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : கர்நாடக அமைச்சரவை இன்று காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் விரிவாக்கம் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் கடந்த ஜூலை 23-ம் தேதி ம.ஜ.த. - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தவுடன், புதிய முதல்வராக ஜூலை 26-ம் தேதி எடியூரப்பா பதவியேற்றார். தனியொருவராகப் பதவியேற்ற எடியூரப்பா, உடனடியாக அமைச்சரவையை அமைக்க விரும்பினார். ஆனால் பல்வேறு காரணங்களால் அது நிறைவேறாமல் போனது.

இந்த சூழ்நிலையில் பா.ஜ.க. சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் பெங்களூரு விதானசெளதாவில் இன்று 20-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் அமித்ஷாவின் ஒப்புதலின்பேரின் அமைச்சரவையில் இடம்பெறுவோரின் பட்டியலை முதல்வர் எடியூரப்பா அறிவிக்க இருக்கிறார். அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று எந்தவித அதிருப்தியும் கட்சியில் வெளிப்பட்டுவிடக் கூடாது என்று அமித்ஷா அறிவுறுத்தி உள்ளதையும் கூட்டத்தில் எடியூரப்பா தெரிவிக்கத் திட்டமிட்டிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, இன்று 20-ம் தேதி முற்பகலில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அமைச்சரவை விரிவாக்கத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அமைச்சர்கள் பதவியேற்பு விழா ஏற்பாடுகளில் கவர்னர் மாளிகை ஈடுபட தொடங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து