முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

வேளாண் பெருமக்கள் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு முறையினை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழ்நாடு முழுவதும் சுமார்  43.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவேரி நீரினை ஆதாரமாக கொண்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் நடப்பு பருவத்தில் 13 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேட்டூர் அணையிலிருந்து கடந்த 13-ம் தேதியன்றும், கல்லணையிலிருந்து 17-ம் தேதியன்றும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நேரடி நெல் விதைப்பு செய்து சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நேரடி நெல் விதைப்பு முறை மூலம் சாகுபடி மேற்கொள்ளும் போது சுமார்  40 முதல் 45 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுவதோடு, நெற்பயிரும் 10 முதல் 15 நாட்கள் முன்னதாகவே அறுவடைக்கு தயாராகி விடும். இதனை முன்னெடுத்து செல்வதற்காக சி.ஆர். 1009, சி.ஆர். 1009 சப் -1, கோ -50, ஏ.டி.டி. 50, டி.கே.எம். 13 போன்ற நெல் ரகங்களின் விதைகள் போதுமான அளவில் இருப்பில் வைக்க நான் வேளாண்மைத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். நடப்பு பருவத்தில் நேரடி நெல் விதைப்பு சாகுபடியினை ஊக்குவிக்க, ஏக்கருக்கு 600 ரூபாய் வீதம் உழவு மானியம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். அதன்படி, 5 லட்சம் ஏக்கர் பரப்பில் நேரடி நெல் விதைப்பு சாகுபடி மேற்கொள்ளும் வேளாண் பெருமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், மானியம் வழங்குவதற்காக, அரசு 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் பாசன வசதி துணையோடு நேரடி நெல் விதைப்பு முறை மூலம் சாகுபடி செய்யும் இதர மாவட்ட வேளாண் பெருமக்களும் மேற்கண்ட உழவு மானியத்தை பெற்று, நீரை சேமித்து அதிக விளைச்சல் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து