தென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக குளூஸ்னர் நியமனம்

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
SPORTS-7 2018 08 23

Source: provided

தென்னாப்பிரிக்கா : அணியை புத்துணர்ச்சி பெற வைக்கும் முயற்சியாக குளூஸ்னரை பேட்டிங் துணை பயிற்சியாளராக நியமித்துள்ளது தென்ஆப்பிரிக்கா.

தென்ஆப்பிரிக்கா அணியின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்தவர் குளூஸ்னர். 47 வயதாகும் தென்ஆப்பிரிக்காவின் டி20 லீக் தொடரில் விளையாடும் டால்பின்ஸ் அணிக்கு 2012 முதல் 2016 வரை பயிற்சியாளராக இருந்துள்ளார். மேலும், ஜிம்பாப்வே அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், ஏராளமான டி20 அணிகளுக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். தற்போது தென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்ஆப்பிரிக்கா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அணியை சீரமைக்க தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் குளூஸ்னர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து