எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் கடைபிடித்த இருமொழி கொள்கையை தொடர்ந்து கடைபிடிப்போம் என்றும், அவர்கள் வகுத்து தந்த பாதையில் இருந்து மாற மாட்டோம் என்றும் அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டமாக தெரிவித்தார். .
சென்னையில் அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் மொழியைப் பொறுத்தவரை அண்ணா காலத்திலிருந்து கடைபிடிப்பது இரு மொழிக் கொள்கைதான். இரு மொழி கொள்கைதான் நேற்றும், இன்றும், நாளையும். இங்கு மக்கள் விரும்பாத எந்த மொழியும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைப்பிடித்த இரு மொழி கொள்கையைத் தொடர்ந்து கடைபிடிப்போம். 1965-ல் மிகப் பெரிய அளவுக்கு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்து பலர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டனர். அப்படிப்பட்ட வரலாறு தமிழகத்தில் உள்ளது. அப்போது மக்களிடம் காங்கிரஸ் ஆட்சி இந்தியைத் திணித்தது. 1967-க்கு பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியவில்லை.
அதன் பிறகு இருமொழிக் கொள்கைதான் திருக்குறள் போல நீடிக்கிறது. அண்ணாவும், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எங்களுக்கு வகுத்துத் தந்த பாதையிலிருந்து என்றைக்கும் நாங்கள் மாற மாட்டோம். எங்களுடைய லட்சியம், கொள்கை, உயிரை கொடுத்தாவது காப்பாற்றுவோம். தமிழை வைத்து வியாபாரம் செய்யும் தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குறித்து பல நேரங்களில் நான் தெரிவித்துள்ளேன். அது வேறு விஷயம். வேறு பிரச்னை இல்லாத நிலையில் தற்போது மொழி பிரச்னையை எடுத்துக் கொண்டார்கள். மொழி பிரச்சனையில் தி.மு.க.வை விட அ.தி.மு.க.தான் முதன்மை நிலையில் இருக்கிறது. எந்த நிலையிலும் தமிழகத்தில் இந்தி மொழி என்பது மக்கள் ஏற்றுக் கொள்ளாத விஷயம். எனவே எங்கள் முன்னோர்கள் வழியில்தான் முடிவுகளை எடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால்தான் முடியும். இந்தி மொழியை நம்முடைய அன்றாட பணிகளில் அதிகமாகப் பயன்படுத்தி மகாத்மா காந்தி, சர்தார் வல்லவாய் படேலின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று நேற்று அமித்ஷா கூறியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார் மேற்கண்டவாறு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
குடிமைப்பணி தேர்வுகளில் தேர்ச்சி பெறும் ஓ.பி.சி. தேர்வாளர்களுக்கு கூடுதல் பணியிடங்களை உருவாக்குங்கள் : மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
12 Mar 2026சென்னை, அரசியலமைப்பின் சமத்துவநெறியோடு செயல்பட்டு, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
-
சமையல் கியாஸ் சிலிண்டருக்கு நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாது: மத்திய அரசு விளக்கம்
12 Mar 2026புதுடெல்லி, நாடு முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
த.வெ.க. உடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை என்பது கற்பனையே: எடப்பாடி பழனிசாமி மீண்டும் விளக்கம்
12 Mar 2026திருச்சி, த.வெ.க. உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பது கற்பனையான ஒன்று.
-
சுட்டு வீழ்த்தப்பட்டதா..? ஈராக்கில் விழுந்து நொறுங்கியது அமெரிக்க விமானம்-4 பேர் பலி
13 Mar 2026தெஹ்ரான், ஈராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானத்தில் பயணித்த பணியாளர்கள் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தூத்துக்குடியில் மாணவி கொலை வழக்கு: சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ஐகோர்ட் கிளையில் மனு
13 Mar 2026தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அ
-
இந்திய பங்குச்சந்தைகள் 3-ம் நாளாக கடும் வீழ்ச்சி : ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு
13 Mar 2026மும்பை, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-ம் நாளாக நேற்று (மார்ச் 13) கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமானது.
-
தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு: கனிமொழி எம்.பி. தகவல்
13 Mar 2026தூத்துக்குடி, தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடுவார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி எம்.பி.. தேர்தல் அறிவிப்பே இன்னும் வரவில்லை.
-
ரூ.581.65 கோடி மதிப்பிலான அனில் அம்பானியின் சொத்துகள் முடக்கம்
13 Mar 2026புதுடெல்லி, கோவா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.581.65 கோடி மதிப்பிலான
-
கள்ளச்சந்தையில் விற்க சிலிண்டர்கள் பதுக்கல்: குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
13 Mar 2026மதுரை, மதுரையில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை காரணம் காட்டி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக 398 எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்திருந்த 2 பேர் தமிழ்நாட்டில் முத
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு நாளை நேரில் ஆஜராகுகிறார் விஜய்
13 Mar 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விஜய் நாளை நேரில் ஆஜராகுகிறார்.
-
தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
13 Mar 2026சென்னை, இளைஞர்களே தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026சென்னை, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் என்.டி.ஏ.
-
மாதவிடாய் விடுப்பு அளித்தால் பெண்கள் வேலை பறிபோகும்: சுப்ரீம் கோர்ட் கருத்து
13 Mar 2026புதுடெல்லி, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கட்டாய விடுப்பு என்று சட்டம் கொண்டுவந்தால் அது பெண்களின் வாழ்க்கையைப் பாதிக்கும், நிறுவன உரிமையாளர்கள், பெண்களை
-
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து 3-வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026புதுடெல்லி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக எல்.பி.ஜி.
-
பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு: கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் விநியோகிக்க தடை
13 Mar 2026சென்னை, பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பாட்டில்கள், கேன்களில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத


