முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எப்போதும் இந்திய கிரிக்கெட்டின் நலன் பற்றிதான் தோனியின் சிந்தனை: கோலி

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

தரம்சலா : எப்போதும் இந்திய கிரிக்கெட்டின் நலன் பற்றிதான் டோனி சிந்தித்து கொண்டிருப்பார். மிகவும் மதிப்பு மிக்க வீரர் டோனி என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி தரம்சலா நகரில் இன்று நடைபெற உள்ளது. உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு இருந்தே டோனியின் பேட்டிங் திறமை மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக டோனியின் பேட்டிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதனால் உலகக்கோப்பை போட்டிக்குப் பின் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் பயணத்தில் இருந்து டோனி தாமாக விலகிக் கொண்டார். இரு மாதங்களாக ராணுவப் பயிற்சி உள்ளிட்டவற்றில் கவனத்தைச் செலுத்திவரும் டோனி, சர்வதேச கிரிக்கெட்டில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை டி20 போட்டிக்கு அணியைத் தேர்வு செய்யும் வகையில், இந்திய அணி தயார் செய்யப்பட்டு வருகிறது. அதனால்தான், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று தொடங்க இருக்கும் டி20 தொடரில் இளம் வீரர்களுக்க அதிகமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரிலும் டோனிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், இன்று தொடங்க இருக்கும் டி20 போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் டோனி  குறித்து நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:

'இந்திய அணியின் மதிப்புமிக்க வீரராக டோனி இன்னும் இருக்கிறார். இன்னும் அவர் விளையாடலாம். ஆனால், அணி நிர்வாகம் இளைஞர்களைக் குறிப்பாக ரிஷப் பந்த் போன்றோரை வளர்க்கும் முயற்சியில் இருக்கிறது. டோனியைப் பற்றி பெருமையாகக் குறிப்பிடும் விஷயம் என்னவென்றால், இந்தியக் கிரிக்கெட்டின் நலனைப் பற்றிதான் டோனி சிந்திப்பார். கிரிக்கெட் அணி நிர்வாகம் என்ன சிந்திக்கிறதோ அதைத்தான் டோனியும் சிந்திப்பார். சிந்தனை ஒரேமாதிரிதான் இருக்கும்.

டோனி, தன்னைப் பற்றி தவறாகக் கணித்தவர்களின் எண்ணத்தை மாற்றியமைத்தவர். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அனுபவம் என்பது மிகவும் முக்கியமானது. ஏராளமான நேரங்களில் மக்கள் சிறந்த விளையாட்டு வீரர்கள் மீது நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் தவறான நம்பிக்கை, சிந்தனை அனைத்தையும் தவறு என்று பலமுறை தனது கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி நிரூபித்துள்ளார். டோனி தொடர்ந்து விளையாடலாம். மிகவும் மதிப்புமிக்க வீரராகவே டோனி இன்னும் இருக்கிறார் எனத் தெரிவித்தார்.
டோனியின் ஓய்வு குறித்து நிருபர்கள் கேட்ட போது அதற்கு கோலி அளித்த பதிலில், ஒருவர் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்துவது என்பது அவரின் சுய விருப்பம். இதில் மற்றவர்கள் ஏதும் சொல்லவதற்கில்லை என்றுதான் நான் நினைக்கிறேன் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து