முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிணற்றில் துண்டு துண்டாக உடல்கள் மெக்சிகோவில் போலீசார் அதிர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

மெக்சிகோ சிட்டி : மெக்சிகோவின் ஜாலிஸ்கோ மாநிலத்தில் ஒரு கிணற்றில் கொன்று புதைக்கப்பட்டிருந்த 44 மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பலியான அனைவரையும் யார் யார் அடையாளம் காண முடிந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்; ஆனால் உடல்களை உரிய பாகங்களோடு இணைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

மெக்சிகோவின் மிகப்பெரும் போதை மருந்து கும்பல்களின் வன்முறை மையமாக விளங்குகிறது ஜாலிஸ்கோ மாநிலம். போட்டிக் குழுக்கள், பழிக்குப் பழி, கடத்தலில் துரோகம் என இங்கு அடிக்கடி பல்வேறு ஓட்டல்கள், பப்புகள், ஒதுக்குப்புறமான பகுதிகள் என பல இடங்களிலும் துப்பாக்கிச் சூடு நடப்பதும், கொலைகள் அரங்கேறுவதும் வெகு சாதாரணம். செப்டம்பர் மாதத்தில் குவாடலஜாரா நகருக்கு வெளியே உள்ள கிணற்றில் மனித உடல்பாகங்கள் சில காணப்பட்டதாகவும் அங்கிருந்து வந்த துர்நாற்றம் குறித்து உள்ளூர்வாசிகள் பற்றி போலீசில் புகார் செய்யத் தொடங்கியதாகவும் செய்திகள் வெளியாயின. 

குவாடலஜாரா, இந்த ஆண்டு மாநிலத்தில் அதிக அளவில் இறந்த மனித உடல்கள் கண்டறியப்பட்ட இரண்டாவது பெரிய இடமாகும்.  கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெரும்பான்மையான உடல்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. அதே வேளை அந்த உடல்கள் அனைத்தும் கை வேறு, கால் வேறு என துண்டிக்கப்பட்டிருந்ததால் அவற்றை சரியாக அடையாளம் காண முடியவில்லை. உடலின் வெவ்வேறு பகுதிகளை ஒன்றாக இணைக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால் அதில் போதிய அளவு வெற்றி கிடைக்கவில்லை.

காணாமல் போனவர்களை தேடும் ஒரு உள்ளூர் அமைப்பு, துண்டிக்கப்பட்ட பாகங்கள் சரியான உடல்பகுதிகளுடன் இணைக்கப்படுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால் இதற்கான அடையாளம் காட்டலுக்கு உதவ கூடுதல் நிபுணர்களை அனுப்புமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், இப்பிரச்சினையில் உள்ளூர் தடயவியல் துறை திணறுவதாகவும், செயல்பாட்டை முடிக்க தேவையான திறன்கள் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து