முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் - அத்துமீறி துப்பாக்கிச்சூடு:

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பாலகோட் : பூஞ்ச் மாவட்டம் பாலகோட் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.   

காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு கடந்த ஒரு மாத காலமாக எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதியில் பாலகோட் மற்றும் பிஹ்ருட் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டிற்கு பயந்து பள்ளிகளில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகளை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.  

உயிர் பயத்தில் ஓடி வந்த குழந்தைகள் இருவரை இந்திய ராணுவ வீரர் ஒருவர் தனது தோள்களில் சுமந்தவாறு பத்திரமான இடத்திற்கு கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று இரவு 10.30 மணிக்கு மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. 

பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர்கள் சிலர் காயமடைந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து