முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கப்பலூர் டோல்கேட் பகுதியில் குற்றங்களை தடுத்திட புறக்காவல் நிலையம் அமைத்திடவேண்டும்: வாகனஓட்டிகள் கோரிக்கை:

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் நான்குவழிச்சாலை டோல்கேட் பகுதியில் நடைபெற்றிடும் குற்றங்களை குறைத்திட புறக்காவல் நிலையம் அமைத்திட வேண்டும் என வாகனஓட்டிகளும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் நான்குவழிச்சாலை பகுதியில் டோல்கேட் செயல்பட்டு வருகிறது.திருமங்கலம் நகருக்கு அருகில் மிகவும் ஆபத்தான இடத்தில் அமைந்துள்ள இந்த கப்பலூர் டோல்கேட் பல்வேறு பரபரப்பான சம்பவங்களின் நிகழ்விடமாக தற்போது மாறி வருகிறது.கட்டணம் கேட்டு வாகனஓட்டிகளை தாக்கிடும் வடமாநில ஊழியர்கள்,கட்டணம் கேட்பவர்களை தாக்கிடும் வாகன உரிமையாளர்கள்,அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்,வழிப்பறிகள்,ஊடுருவிடும் குற்றவாளிகள் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் என பல்வேறு அதிரடி சம்பவங்களால் கப்பலூர் டோல்கேட் பகுதி எப்போது பரபரப்புடன் காணப்படுகிறது. இது போன்ற காரணங்களால் கப்பலூர் டோல்கேட் பகுதியில் ஹைவே-பேட்ரோல் போலீசார்,போக்குவரத்து போலீசார் மற்றும் ரோந்து போலீசார் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இருப்பினும் அதனையும் மீறி கப்பலூர் டோல்கேட் பகுதியில் பல்வேறு பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் குற்றவாளிகள் ஊடுருவுவதை தடுத்திடவும்,குற்ற சம்பவங்களை குறைத்திடவும்,அடி-தடி மோதல் சம்பவங்களை கட்டுப்படுத்திடவும் கப்பலூர் டோல்கேட் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படுவது அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது.இது குறித்து வாகனஓட்டிகள் கருத்து தெரிவிக்கையில்,கப்பலூர் டோல்கேட் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டால் வாகனஓட்டிகள் மீது வடமாநில ஊழியர்கள் தாக்குதல் நடத்துவதை கட்டுப்படுத்திட முடியும்.அதே போல் துப்பாக்கிச்சூடு,ஆசிட்வீச்சு,வழிப்பறி போன்ற இதர குற்ற நிழ்வுகளையும் புறக்காவல் நிலையத்தில் 24மணிநேரமும் பணியிலிருக்கும் போலீசாரால் தடுத்திட முடியும் என்றும் தெரிவித்தனர்.எனவே கப்பலூர் டோல்கேட் பகுதியில் குற்ற நிகழ்வுகளை கட்டுப்படுத்திட 24மணி நேரமும் இயங்கிடும் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து